மருத்துவத் துறையில் மூன்றாடம் பெற்றுக் கொண்ட ஹகீம் கரீம் » Sri Lanka Muslim

மருத்துவத் துறையில் மூன்றாடம் பெற்றுக் கொண்ட ஹகீம் கரீம்

Contributors
author image

இக்பால் அலி

நேற்றிரவு வெளியான க. பொ. த உயர் தரப் பிரிவில் உயிரியல் துறையில் அகில இலங்கை மட்டத்தில் மூன்றாடம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவன் எம். ஆர். எம். ஹகீம் கரீம் கருத்து தெரிவிக்கையில்

மருத்துவத் துறையில் அகில இலங்கை மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமைக்கு நான் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றேன். நான் ஆங்கில மொழி மூலத்தில் முதலாம் இடத்தையும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளேன்.

இது என்னுடைய தனி முயற்சி அல்ல. என்னுடைய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முக்கியத்துவம் பெறுகின்றார்கள். எதிர்காலத்தில் வைத்தியத்துறையில் எமது சமூகத்துக்கு சேiயாற்றுவேன் என்பதுடன் இதில் பல சாதனைகளையும் படைக்கவுள்ளேன் என்று எம். ஆர். எம். ஹகீம் கரீம் தெரிவித்தார்.

தந்தை வீதி அபிவிருத்தி திட்டத்தின் பொறியியலாளர் எம். சீ. எம். ரிஸ்மி கருத்துத் தெரிவிக்கையில்
நாங்கள் அவருடைய படிப்புக்குத் துணையாக இருந்தாலும் பாடசாலை அதிபர் ஆசிரியர் குழாத்தினருடைய பங்களிப்பு அளப்பரியது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் தெரிவித்தார்.

மாத்தளை சாஹிரா அதிபர் டி. அப்துல் கலாம் கருத்துத் தெரிவிக்கையில்
இன்று மாத்தளை சாஹிராவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மைல் நாளாகும். அகில இலங்கையில் மூன்றாம் இடத்iயும் மாத்தளை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். இது எமது பாடசாலைக்கு மட்டுமல்ல மாத்தளை மாவட்டத்தில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் பெருமை தரும் விடயமாகும். ஏனென்றால் இதற்கு முன் எந்தப் பாடசாலையும் பெற முடியவில்லை. அந்த வகையில் எமது பாடசாலை சமூகம் மிகவும் சந்தோசத்துடன் உள்ளனர்.

அவருடைய பெறுபேற்றின் பின்னணயில் பலர் உந்து சக்தியாக இருந்துள்ளனர். ஒன்று இந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்கள். தரம் ஒன்றில் இருந்து கற்பித்த மாணவனுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் இதற்கு உடந்தைதாரிகள். இந்த மாணவனுடைய பெற்றோர்கள்.

இந்த மாணவனின் வெற்றிக்கும் நல்லொழுக்கத்திற்கும் துணையாக இருந்து அயராது பாடுபட்டு இருக்கின்றார்கள். இந்த மாணவர் கற்றலோடு மட்டுமல்ல நல்ல ஒழுக்க சீல குணமுடைய மாணவராகவும் இருந்திருக்கின்றார். அது மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுடைய பரீட்சை வினாத் தாள்களையும் செய்து கடுமையான பயிற்சியைப் பெற்றார்.
இதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் குறித்த மாணவனுடைய அயராத உழைப்புத் தான் இந்த உயர் தர அரிய பெறுபேற்றைப் பெற்றுக் கொள்வதற்கான காரணம் ஆகும்.

இவர் மாத்தளை நகரில் வசிக்கின்ற பொறியியலாளர் சீ.எம். ரிஸ்மி மற்றும் வைத்திய அதிகாரி நிஹாரா ரிஸ்மி தம்பதிகளின் மூத்த புதலவனும் ஆவர். எம். ஆர். ருஸ்தா எம். ஆர். எம். ஆதில் ஆகியோர்களுடைய சகோதரர் ஆவர்.

????????????????????????????????????

Web Design by Srilanka Muslims Web Team