உயிரோடு வாழும் ஒரு மனிதருக்கு "நரகவாசி" என தீர்ப்பளித்தல் » Sri Lanka Muslim

உயிரோடு வாழும் ஒரு மனிதருக்கு “நரகவாசி” என தீர்ப்பளித்தல்

image

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான அல் மனீஃ

உயிரோடு வாழும் ஒரு மனிதரைப் பார்த்து நீ நரகத்திற்கு உரயவன் என்றோ அல்லது சுவர்க்கத்திற்கு உரயவன் என்றோ தீர்ப்பளிப்பதை கட்டாயமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சவுதி அரேபிய மூத்த அறிஞர் குலாமின் உறுப்பினராகிய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான் அல் மனீஃ அவர்கள் மார்க்கத் தீர்ப்பளிக்கும் தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் பதில் அளிக்கும் போது குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஒரு மனிதர் உயிர்வாழும் போது அவரின் செயற்பாடுகளை வைத்து எந்த ஒரு மனிதராலும் இருதித் தீர்மானத்திற்கு வந்துவிட முடியாது. காரணம் குறித்த மனிதனின் கடைசி நிமிடங்கள் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பது எம்மால் ஊகிக்க முடியாத ஒன்றாகும். இதற்கு நபி (ஸல்) அவர்களின் வாக்குமூலம் சான்றாக இருக்கின்றது.

“நிச்சயமாக ஒரு மனிதர் சுவர்க்க வாசிகளின் செயல்களில் ஈடுபட்டு, அவருக்கும் சுவர்க்கத்திற்கு ஒரு முளம் அளவு இருக்கும் போது அவருக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட (எழுதப்பட்டது) குறிக்கிட்டு அவர் நரக வாசிகளின் செயலில் ஈடுபட்டு நரகதிதில் நுழைந்து விடுவார். மேலும் இன்னுமொரு மனிதர் நரகவாசிகளின் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நரகத்திற்கும் அவருக்கும் ஒரு முளம் அளவு இருக்கும் போது அவரது இருதித் தருவாயில் அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது குறுக்கிட்டு அவர் சுவர்க்க வாசிகளின் செயலை செய்து இருதியில் அவர் சுவர்க்கம் நுழைவார். ஆதாரம்: புகாரி 3208, முஸ்லிம் 2643

தொர்ந்து ஷெய்க் அவர்கள் விளக்கமளிக்கையில்: நிச்சயமாக ஒரு மனிதனுடைய உள்ளம் அல்லாஹ்வின் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளது. அல்லாஹ் நாடியவாரு அந்த உள்ளத்தை பிறட்டுகின்றான். (ஆதாரம்: இப்னுமாஜா 199, இமாம் அல்பானி ‘ஸஹீஹ் என தீர்பளித்துள்ளார்கள்)

மேற்குறித்த நபிமொழியின் அடிப்படையில் நாம் யாரைப் பார்த்து “காபிர் என்றே நரகவாசி” என்றோ தீர்ப்பளித்தோமோ, அவர் கடைசி நிமிடத்தில் நல்லவராக மாறிவிட வாய்ப்பிருக்கின்றது என்பதே இஸ்லாமிய வழிகாட்டலாகும்.

மேலும் நாம் இப்படி அவசரப்பட்ட தீர்பளிப்பதாவது அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ள ஒரு விஷயத்தில் கையடிப்பதைப் போன்று ஆகிவிடும். காரணம் அல்லாஹ் அனைவரது முடிவையும் நிர்ணயம் செய்து வைத்துள்ளான். அந்த நிர்ணயத்தின் இருதி முடிவியை யாரும் அறிந்து விட முடியாது. சில வேலை ஒரு நல்ல மனிதர் கூட கடைசி நேரத்தில் வழி தவறி கெட்டவராக மாறவிடும் சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

ஒருவன் இறைவனை நிராகரிக்கக் கூடிய காபிராக மரணித்தால் அவனை நரக வாதி என்றும் ஒருவன் தூய இஸ்லாத்திலும், நேர்வழியிலும், இறையச்சத்தின் அடிப்படையிலும் வாழ்ந்து மரணித்தால் அவரை சுவர்க்க வாசி என்று கூறுவதில் தடையில்லை என்பதனை ஒருவர் உயிரோடு இருக்கும் போது நரக வாசி, சுவர்க்க வாசி என்று தீர்ப்பளிக்க கூடாது என்பதில் இருந்து விளங்களாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

தமிழாக்கம்: எம். றிஸ்கான் முஸ்தீன்
அல் கப்ஜி, சவுதி அரேபியா.

Web Design by The Design Lanka