கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக யூ.எல்.எம் அமீன் » Sri Lanka Muslim

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக யூ.எல்.எம் அமீன்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

( எம்.என்.எம்.அப்ராஸ்)


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக கல்முனையைச் சேர்ந்த
யூ.எல்.அமீன்(SLPS-1) அவர்கள் இன்று 02 தனது கடமைகளை பொறுப்பேற்றார்

அண்மையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியின்அதிபர் வெற்றிடத்திற்காக நடத்தப்பட்ட நேர்முக பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதையடுத்தே இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இவர் பலாங்கொடை தமிழ மகா வித்தியாலயம் சாய்ந்தமருது மழஹருஷ்ஸம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிலும் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலம் பிரதி அதிபராகவும் அதிபராகவும் கடமையாற்றியுள்ள இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வியியல் முதுமாணி டிப்ளோமாவையும் பூர்த்தி செய்துள்ளார் . மேலும் இவர் இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தரத்தை சேந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் இலங்கையின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான சோலைக்கிளி அதீகின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்காளான எம்.ஐ.எம். மனாப் ,ஏ.எம். பைரூஸ் மற்றும் பாடசாலை உதவி, பிரதிஅதிபர்கள் ,ஆசிரியர்கள் ,நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team