தென் - கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியை உமாக்குமாரசுவாமி சென்ற வாகனம் விபத்து » Sri Lanka Muslim

தென் – கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியை உமாக்குமாரசுவாமி சென்ற வாகனம் விபத்து

oluvil

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தென் – கிழக்குப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியை உமாக்குமாரசுவாமி சென்ற வாகனம் விபத்து: கொலை முயற்சி? தென்கிழக்குக் கற்றோர் சங்கம் சந்தேகம்


அபுவக்கர்


தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராகக் கடமையாற்றிய பேராசிரியர் நாஜீமின் நிர்வாகத்திறமையின்மை காரணமாக அவர் விசேட வர்த்தமானி 2076ஃ13ம் இலக்க 19.06.2018ம் திகதிய வர்த்தமானி மூலம் அவரின் முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பதவியிலிருந்து தற்போதைய உயர்கல்வியமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச அவர்களினால் இடைநிறுத்தப்பட்டு அப்பதவிற்கு புதிய உபவேந்தர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் அப்பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக போராசிரியை திருமதி உமாக்குமாரசுவாமி அவர்கள் கடந்த 18.06.2018ம் திகதியிலிருந்து நியமிக்கப்பட்டு அங்கு மிக நீண்ட நாட்களாக இருந்துவந்த மாணவ மற்றும் நிர்வாக சிக்கல்களை தமது சாமத்தியமான திறமையினால் தீர்வுகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் அப்பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் பதவிக்கான தேர்வு இம்மாதம் 28.07.2018ம் திகதி நடைபெறவுள்ளது. அப்பதவிக்கு பதவி நீக்கம் செய்யப்பட்ட உபவேந்தர் தாம் பதவியிலிருந்த போது விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில் இப்பல்கலைக்கத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள தகுதிவாயந்த அதிகாரியின் சாராதியாக பதவி நீக்கப்பட்ட உவேந்தரின் சாராதியே நியமிக்கப்பட்டிருந்தார்.

இச்சாரதி தகுதி வாய்ந்த அதிகாரி அவர்களை ஏற்றிக் கொண்டு பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான மோட்டார் காரில் கொழும்புக்குச் சென்றவேளை ‘திபிலிப்பிட்டிய’ என்னுமிடத்தில் பாதைசமிஞ்சையுடன்  (06.07.2018) காலை 11.00 மணியளவில் மோதியுள்ளார்.

இதன் பின்னணியில் வேறு மறைகரம் இருக்கலாம் என்று தென்கிழக்குப் பல்கலைக்கழ சமூகம் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன். இதுதொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தென்கிழக்குக் கற்றோர் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

Web Design by The Design Lanka