இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய அதிபராக ஏ.ஜி.எம்.றிசாத் கடமையேற்பு » Sri Lanka Muslim

இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய அதிபராக ஏ.ஜி.எம்.றிசாத் கடமையேற்பு

Contributors
author image

Aslam S.Moulana

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய அதிபராக நற்பிட்டிமுனையை சேர்ந்த ஏ.ஜி.எம்.றிசாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதன்கிழமை (02-01-2019) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

2015ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை தரம்-III போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் உதவி அதிபராக கடமையாற்றி வந்த நிலையில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் மேற்படி பாடசாலைக்கு அதிபராக நியமணம் செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2018.11.29ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு ஏ.ஜி.எம்.றிசாத் தோற்றியிருந்தார்.

ஆரம்பக் கல்வியை நற்பிட்டிமுனை அல்அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையிலும் பயின்ற இவர் மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியில் கற்பித்தலுக்கான தேசிய போதனாசிரியர் டிப்ளோமா பட்டத்தை பூர்த்தி செய்து, அதில் திறமைச் சித்தியும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொதுக் கல்விமாணிப் பட்டத்தை பெற்று, அதில் வகுப்பு நிலை சித்தியும் பெற்றுள்ளார்.

அத்துடன் தேசிய கல்வி நிறுவனத்தால் நடத்தப்பட்ட பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்து, அதில் திறமைச் சித்தியும் இந்தியாவின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்திற்கான முதுமாணிப் பட்டத்தை பூர்த்தி செய்து, அதில் வகுப்பு நிலை சித்தியும் பெற்றுள்ளதுடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணிப் பட்டப்பின் படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.

இவர் ஓய்வுபெற்ற அதிபரும் முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினருமான அப்துல் கபூர், அஸீஸா தம்பதியரின் ஏகபுதல்வராவார்.

Web Design by Srilanka Muslims Web Team