இதுவரை ஆராயப்படாத நிலவின் இருண்ட மறுபக்கத்தில் தரையிறங்கிய சீன விண்கலம் » Sri Lanka Muslim

இதுவரை ஆராயப்படாத நிலவின் இருண்ட மறுபக்கத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்

49698463_377531349669065_1132695691861164032_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Siva Ramasamy


இதுவரை ஆராயப்படாத நிலவின் இருண்ட மறுபக்கத்தில் தரையிறங்கி சீன விண்கலம் ஒன்று சாதனை படைத்துள்ளது.

1969-ஆம் ஆண்டு சந்திரனுக்கு முதன்முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. அதை தொடர்ந்து இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் சந்திரனில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

பொதுவாக நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்பி சோதனைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன என்பதையும், அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சீனாவின் ‘சாங் இ’ என்னும் விண்வெளித் திட்டம் செயல்படுகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவினை ஆராய்ச்சி செய்யும் ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e 4 Mission) எனும் திட்டத்தை சீனா செயல்படுத்தியுள்ளது. இதுவரை பூமியின் பார்வைக்கு எட்டதாக நிலவின் இருண்ட பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் செயற்கைக்கோளை ஏவ சீனா திட்டம் தீட்டியது.

பொதுவாக நிலவின் ‘இருண்ட பக்கம்’ என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும், பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால்தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.

அதன்படி சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில், இந்த செயற்கைக்கோளானது நிலவை நோக்கி செலுத்தப்பட்டது. இந்த முயற்சியின் மூலம் நிலவின் இருண்ட பக்கத்தில் உள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

இந்த விண்கலத்தை கரடுமுரடான பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கி சீனா தற்போது சாதனை படைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Web Design by The Design Lanka