மட்டக்களப்பில் தமிழ்ச்சமூகத்தை பிய்ந்த செருப்பால் அறைந்த இன்னுமொரு சமூகம் » Sri Lanka Muslim

மட்டக்களப்பில் தமிழ்ச்சமூகத்தை பிய்ந்த செருப்பால் அறைந்த இன்னுமொரு சமூகம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தமிழ் இனத்தின் ஒரு பகுதியும் எமது சொத்துக்களின் பெரும்பகுதியும் கடந்த கால 30 வருட யுத்தத்தினால் அழிந்து வாழ்விடங்கள் கபளீகரம் செய்யப்பட்டாலும் எம்மிடமிருந்து கல்வியை மட்டும் பிடுங்கிவிட முடியாது என புலிகள் காலத்திலேயே தக்கவைத்தவர்கள் நாம்.

பல சந்தர்ப்பங்களில் வியாபாரத்தில் அரசியலில் அபிவிருத்தியில் கிழக்கில் முன்னிருக்கும் முஸ்லிம்களால் தமிழர்களை கல்வியில் தோற்கடிக்கவே முடியவில்லை.

சிலவேளைகளில் பரீட்சைகளில் முன்னேறினாலும் எம்மால் அவர்கள் கொப்பி அடித்துத்தான் பெறுபேறுகளில் முன்னிலை வகிக்கிறார்கள் என அவதூறு பரப்பப்பட்டது. சிலவேளைகளில் அதில் உண்மையும் இருந்ததுண்டு.

ஆனால் படிப்படியாக கல்வித்துறையில் திட்டமிட்டு தங்களை வளர்த்துக்கொண்ட முஸ்லிம்கள் பெரியதொரு பாய்ச்சலை இம்முறை கிழக்கில் அதுவும் முக்கியமாக மட்டக்களப்பில் காட்டியிருக்கிறார்கள். இறுதியாக வெளியிடப்ட்ட க.பொ.த ( உ/த) பரீட்சை முடிவுகள் துலாம்பரமாக காட்டியுள்ளது. உதாரணத்திற்கு மட்டு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதல் மூன்று இடங்களையும் அந்த குழந்தைகள் பெற்றுள்ளன.
இந்த தமிழ் மக்களின் இழிநிலை கண்டு அரசியல், பொருளாதார காரணங்களை மட்டும் கூறிக்கொண்டு வேதனைப்படுவதுடன் நிற்க முடியாது.

ஆசிரியர்கள் நேரடியாக இந்த சவால்களை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். மேலதிக தூரம் நடக்க வேண்டியவர்களாகவும் தலைமைத்துவம் கொடுக்க வேண்டியவர்களும் பாடசாலை கல்விச் சமூகம் காணப்படுகிறது. மற்றவர்கள் வெறுமனே கோபுரங்கள் கட்டுவதிலும் கூத்தடிப்பதிலும் தங்களின் பெயரைப் பொறிப்பதிலும் காட்டும் அக்கறையை இந்த கல்வி மேம்பாட்டில் காட்டவேண்டும்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், வியாபாரிகள், தனியார் வகுப்புக்கள், பழைய மாணவர்களென பிரதிபலன் பார்க்காது யூதர்களாக மாற வேண்டும். கடந்த 40 வருடங்களாக கல்வியில் ஏற்பட்ட தாழ்வை தமிழர் சமூகம் ஐந்தாண்டு திட்டம் ஒன்றினூடாக மேம்படுத்த முன்வர வேண்டும்.
ஒத்துழைப்பிற்கு நான் தயார் நீங்கள் தயாரா?
மகிழ்ச்சி.

Dr. குணசிங்கம் சுகுணன்
வைத்திய அத்தியட்சகர்

Web Design by The Design Lanka