இளம் எழுத்தாளர் சில்மியா யூசுப் பாராட்டி கெளரவிப்பு » Sri Lanka Muslim

இளம் எழுத்தாளர் சில்மியா யூசுப் பாராட்டி கெளரவிப்பு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

( ஐ. ஏ. காதிர் கான் )


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இசைத்தென்றல் அமைப்பின் ஏற்பாட்டில், இளம் எழுத்தாளர் சில்மியா யூசுப், அண்மையில் பொன்னாடை போர்த்தி பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.

துரிதமாக வளர்ந்து வரும் இளம் எழுத்தாளரான இவரது சமூக நல மற்றும் எழுத்துத் துறைக்கு இவர் ஆற்றிய சேவைகளையும், ஊடகத்தில் இஸ்லாத்திற்காகப் பங்களிப்புச்செய்த அரும் பெரும் முயற்சிகளையும் பாராட்டியே, இவர் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.

இது தொடர்பிலான நிகழ்வு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆனந்த சமரக்கோன் கலை அரங்கில், கடந்த 30 ஆம் திகதியன்று மாலை இடம்பெற்றது.

இசைத்தென்றல் அமைப்பின் தொகுப்பாளர் அபூ உபைதா மெளஜூத் தலைமையில் இடம்பெற்ற இச்சிறப்பு நிகழ்வில், அமைச்சர் மனோ கணேசன், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயரும் புதிய மேல் மாகாண ஆளுநருமான அஸாத் சாலி, டாக்டர் கெளசல்யா தேவி, மகேஸ்வரி மனோ கணேசன் உள்ளிட்ட பிரமுகர்கள், ஆர்வலர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தனது ஊரில் முதன்மை ஆங்கில ஆசிரியையாக விளங்கி, எழுத்துத்துறை, ஊடகத்துறை மற்றும் சமூக சேவைப் பணிகளில் திறன் மிக்கவராக தன்னை அர்ப்பணம் செய்தமைக்காகவே இளம் எழுத்தாளர் சில்மியா யூசுப், இவர்கள் முன்னிலையில் பொன்னாடை போர்த்தி, பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team