மேல் மாகாண ஆளுணாின் இணைப்புச் செயலாளராக ஹயாத்து முஹம்மது நிஜாம்தீன் அவர்கள் நியமனம். » Sri Lanka Muslim

மேல் மாகாண ஆளுணாின் இணைப்புச் செயலாளராக ஹயாத்து முஹம்மது நிஜாம்தீன் அவர்கள் நியமனம்.

49756199_1163420687145791_6869652455961919488_n

Contributors

இவர் கோறளை பற்று மேற்கு ஓட்டமாவடி மீராவோடை பிரதேசத்தைப் பிரப்பிடமாகக் கொண்டவராவார் மேலும் இவர் தேசிய ஐக்கிய முன்னணியின் மட்க்களப்பு மாவட்ட அமைப்பாளரும். ஊடகவியலாளருமாவார்.

இவருக்கான நியமன கடிதத்தினை மேல் மாகாணத்திற்காக புதிய ஆளுணரான தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி அவர்களினால் ராஜகிரியவில் உள்ள ஆளுநர் அலுவலகதில் வைத்து 09.01.2019 அன்று வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

சமூகசெயற்பாட்டாளரான இவர் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் பழயை மாணவருமாவார். தேசிய மற்றும் உள்ளூர் அரசியலில் ஈடுபட்டு வருகின்ற ஹயாத்து முஹம்மது நிஜாம்தீன், அஸ்.ஸலாம் அமைப்பின் பிரதி பணிப்பாளருமாவார்.அஸ்.ஸலாம் அமைப்பின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மற்றும் கல்குடா பிரதேசத்தில் சமய மற்றும் கல்வி போன்ற பல தொண்டர் சேவைகளை மேற்கொண்டு வருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

இவருக்கு கிடைக்கப்பெற்ற நியமனம் கல்குடா பிரதேசத்துக்குக்கிடைக்கப்பெற்ற பெருமையாகும்

Web Design by The Design Lanka