சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம்' அங்குரார்ப்பணம் » Sri Lanka Muslim

சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம்’ அங்குரார்ப்பணம்

19750530 (2)

Contributors
author image

Aslam S.Moulana

அம்பாறை மாவட்டத்தை தளமாகக் கொண்டு ‘சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம்’ எனும் புதிய அமைப்பு ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் தலைமையிலான முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் அதன் ஆலோசகர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அஹமதுல் அன்சார் மௌலானாவின் நெறிப்படுத்தலில் கல்முனை கிறிஸ்ரா இல்ல மண்டபத்தில் இதன் அங்குரார்ப்பணம் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது புதிய அமைப்புக்கான வரைவு யாப்பு சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டதுடன் அதன் பிரகாரம் நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

அமைப்பின் போஷகராக டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், தலைவராக கே.சந்திரலிங்கம் (ஓய்வுபெற்ற அதிபர்), உப தலைவர்களாக மௌலவி இசட்.எம்.நதீர், எஸ்.சபாரத்தினம் (அதிபர்), ஆயர் ஏ.கிருபைராஜா, செயலாளராக ஏ.ஜி.எம்.றிஸாத் (அதிபர்), பொருளாளராக பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா, உப செயலாளராக பி.ஜெனிதா, உப பொருளாளராக எம்.எம்.உதுமாலெப்பை, தவிசாளராக ஏ.பீர்முஹம்மட் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் இளைஞர், மகளிர் பிரிவுகளுக்கும் கிராம மற்றும் பிரதேச குழுக்களுக்கும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் துறைசார் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த கூட்டத்தில் சிங்கள, பௌத்த இன, மதம் சார்ந்த பிரதிநிதிகளை உள்வாங்குவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Web Design by The Design Lanka