சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் கண்டனம் » Sri Lanka Muslim

சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் கண்டனம்

photo

Contributors
author image

Aslam S.Moulana

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் இடம்பெற்றதாக சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுவரும் சம்பவங்களை மையமாக வைத்து சமூகங்களுக்கிடையில் விரிசல்களை தூண்டும் வகையில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் (EASE) வன்மையாக கண்டித்துள்ளது.

அமைப்பின் தலைவர் கே.சந்திரலிங்கம் தலைமையில் நேற்று புதன்கிழமை (09) மாலை சாய்ந்தமருதில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் எல்லா இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பங்குபற்றி இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியதன் பேரில் அமைப்பின் பொருளாளரும் ஊடகப் பேச்சாளருமான பொறியியலாளர் அஸ்லம் சஜா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“ஒரு சில தனிநபர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அத்தனிநபர்கள் சார்ந்த சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளாக திரிவுபடுத்தி அரசியல் செய்ய முனையும் நபர்களையும் குழுக்களையும் எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

இரண்டு நபர்களிடையேயோ அல்லது குறிப்பிட்ட சில குழுக்களுக்கிடையிலான தகராறுகளை தீர்த்து வைக்க அச்சமூகம் சார்ந்த சிவில் சமூக அமைப்புக்களுடன் கலந்துரையாடி சட்ட வரையறையினுள் தீர்வு காண்பதற்கான முன்னெடுப்புக்களை இரு சமூகம் சார்ந்த சமூக அரசியல் தலைவர்கள் விரைந்து செயற்பட வேண்டிய தேவையையும் இத்தருணத்தில் வலியுறுத்த விரும்புகிறோம்.

இப்பிரச்சினைகளின் உண்மைத்தன்மையை விசாரித்து அவற்றை தீர்ப்பதற்கான உரிய நடவடிக்களை மேற்கொள்வதோடு இவற்றுடன் சம்பந்தப்பட்ட தனிநபர்களில் தவறுகள் நிருபிக்கப்படுமிடத்து அதற்கான தண்டனையும் பாதிக்கப்படவர்களுக்கான நீதியும் மிக விரைவில் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் இப்பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை சமூக ஊடகங்களில் திரிவுபடுத்தி இன முரண்பாடுகளையும் அவற்றிற்கிடையிலான வெறுப்பு உணர்வுகளையும் தோற்றுவிக்க முனைவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறும் இரு சமூகங்களின் சார்பாகவும் சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் வேண்டிக் கொள்கிறது.

Web Design by The Design Lanka