811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதத்கான அமைச்சரவை பத்திரத்தில் அமைச்சர் கைசாட்டிட்டார்-இம்ரான் எம்.பி » Sri Lanka Muslim

811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதத்கான அமைச்சரவை பத்திரத்தில் அமைச்சர் கைசாட்டிட்டார்-இம்ரான் எம்.பி

49707182_2015493955214243_1542753300695220224_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கிழக்கு மாகாணத்தில் 811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதத்கான அமைச்சரவை பத்திரத்தில் அமைச்சர் கைச்சாத்திட்டார் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை தொண்டராசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கடந்த மஹிந்த அரசால் நியமனம் வழங்காமல் ஏமாற்றப்பட்ட தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்க கல்வி அமைச்சர் கௌரவ அகிலவிராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்திருந்தார். அந்த வகையில் வடக்கு மாகான தொண்டராசிரியர்களுக்கு அண்மையில் எமது அரசால் நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 445 தொண்டார்சிரியர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்று உண்மையான தொண்டாரிரியர்களின் விபரங்களை நாம் மாகான சபையிடம் கூறியிருந்தோம். எனினும் கிழக்கு மாகான கல்வி அமைச்சு தொண்டராசிரியர்கள் தொடர்பாக உரிய விபரங்களை வழங்க தாமதித்ததால் கிழக்கு மாகான தொண்டராசிரியர்களுக்கான நியமனம் தாமதமானது.

அதன்பின் நாம் கோரிய தகவல்களை திரட்ட கடந்த வருடம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் தொண்டராசியர்களுக்கான நேர்முகத்தேர்வு நடாத்தி அதில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் மத்திய கல்வி அமைச்சுக்கு மாகான சபையால் அவர்கள் நடாத்திய நேர்முகத்தேர்வில் தெரிவுசெய்யப்படவர்களின் பட்டியலை அனுப்பாமல் வேறு ஒரு பட்டியலே அனுப்பப்பட்டிருந்தது.

இதனால் ஏற்பட்ட குழப்ப நிலையை தீர்க்க நான் கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அமைச்சருடன் கலந்துரையாடியதுக்கு அமைவாக அன்று எடுக்கப்பட்ட முடிவின்படியே இன்று 811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதத்கான அமைச்சரவை பத்திரத்தில் இன்று அமைச்சர் கைச்சாத்திட்டார்.

இதன்போது அமைச்சர்களான வஜிர அபேவர்தன,ஹலீம்,கல்வி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜெயமன்ன,மேலதிக செயலாளர் ஹேமந்த ,கிழக்கு மாகான தொண்டாராசிரியர் சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

விரைவில் மத்திய கல்வி அமைச்சில் இவர்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்று தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்கப்படும்

மேலும் இந்த தொண்டராசிரியாயர் விடயத்தில் சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதும் இந்த இழுபறி நிலைக்கு காரணமாக இருந்தது. இந்த அரசியல்வாதிகள் கடந்த மஹிந்த ராஜபக்சவின் அரசிலும் ஆளும் கட்சியிலேயே இருந்தனர் ஆனால் அன்று இந்த நியமனத்தை வழங்க எந்த ஒரு நடவடிக்கையும் இவர்களால் மேற்கொள்ளப்படவில்லை ஆனால் இன்று நான் கல்வி அமைச்சருடன் இணைந்து இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே தொண்டராசிரியர்கள் அவர்களின் கண்களுக்கு தென்பட்டுள்ளனர் என தெரிவித்தார்

ஊடகப்பிரிவு

Web Design by The Design Lanka