அப்துல்லா மஹரூபுக்கு கப்பல் துறை பிரதியமைச்சு: ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் » Sri Lanka Muslim

அப்துல்லா மஹரூபுக்கு கப்பல் துறை பிரதியமைச்சு: ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில்

20190111_095554

Contributors
author image

Hasfar A Haleem

துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சராக இன்று (11) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்து கொண்ட திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹரூப் அவர்கள் இதனை இட்டு கிண்ணியாவில் உள்ள தனது ஆதரவாளர்கள் வெடில் கொழுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள்.

கிண்ணியா புஹாரியடி சந்தி,அல் அக்ஸா சந்தி உள்ளிட்ட இடங்களில் தங்களது மகிழ்ச்சிகளை ஆதரவாளர்கள் வெளிப்படுத்தினார்கள்.

நூற்றுக்கணக்கான கட்சியின் ஆதரவாளர்கள் இதில் கலந்து கொண்டு அப்துல்லா மஹரூப் அவர்களுக்கு பிரதியமைச்சு கிடைத்ததை இட்டு சந்தோசம் வெளியிட்டார்கள்.

Web Design by The Design Lanka