சமூக விரோதச் செயல்களுக்கு பறிபோகும் வீட்டுத் திட்டங்கள் » Sri Lanka Muslim

சமூக விரோதச் செயல்களுக்கு பறிபோகும் வீட்டுத் திட்டங்கள்

IMG-20190109-WA0000

Contributors
author image

Hasfar A Haleem

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நடுவூற்றுக் கிராமத்தில் காணப்படும் சுனாமி வீட்டுத் திட்டங்கள் பாலடைந்து தேடுவரற்று காணப்படுவதாகவும் சமூக விரோதச் செயல்கள் இடம் பெற்று வருவதாகவும் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

நடுவூற்று கிராம சேவகர் பிரிவில் அமையப் பெற்றுள்ள இவ் வீட்டுத் திட்டங்களில் பல வீடுகள் தேடுவாரற்று காணப்படுகிறது.

2004 ம் ஆண்டின் பின்னர் அமைக்கப்பட்ட குறித்த வீடுகள் அரசாங்கத்தின் கண்காணிப்பில் கட்டிக் கொடுக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அன்றைய காலம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் பல வருட காலமாக மக்கள் குடியேற்றமில்லாத சமூக விரோதச் செயல்களுக்கு துனை போகிறதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

போதை பாவனை உட்பட பல சமூக சீரழிவுகளுக்கும் இவ் வீட்டுத் திட்டங்கள் துனை நிற்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்கள்.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் வீடுகளற்ற நிலையில் அன்றாடம் பல கஷ்டங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள் இவர்களுக்காவது உரிய வீட்டுத் திட்டங்களை கையளிக்க முன்வருமாறு உரிய சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Web Design by The Design Lanka