ஜனாதிபதிக்கு அல் - குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வழங்கி வைப்பு » Sri Lanka Muslim

ஜனாதிபதிக்கு அல் – குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வழங்கி வைப்பு

Thasim Moulavi

Contributors
author image

M.S.M.ஸாகிர்

ஜனாதிபதி மாளிகையில் வியாழக்கிழமை (07) மாபெரும் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வில், நாட்டின் நாலாபுறமிருந்தும் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் முஸ்லிம்களோடு சகோதர இனங்களான சிங்கள, தமிழ் சகோதரர்களும் இணைந்து சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜம்மியத்துல் உலமாவின் உதவிச் செயலாளர் எம்.எஸ்.எம். தாஸிம் மௌலவியால் அல் – குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பை வழங்கிய வேளை…

அருகில் மாகாணசபை உள்ளூராட்சி மன்ற, விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் காணப்படுகின்றார்.

Thasim Moulavi

Web Design by The Design Lanka