இனவாதிகளால் திட்டமிடப்பட்ட ஹர்தால் நல்லுறவால் முறியடிப்பு.. » Sri Lanka Muslim

இனவாதிகளால் திட்டமிடப்பட்ட ஹர்தால் நல்லுறவால் முறியடிப்பு..

FB_IMG_1547194206009

Contributors
author image

Junaid M. Fahath

கிழக்கு மாகாணத்தில் நல்லுறவுடன் வாழும் தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் குழப்பங்களை உருவாக்கி பிரிவினைகளை தோற்றுவிக்கும் வகையிலும் ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு எதிர்ப்பு தெறிவிக்கும் வகையிலும் கிழக்கு மாகாண மக்கள் ஒன்றியம் எனும் பெயரில் இன்று (11) கிழக்கு மாகாணம் முழுவதும் வர்த்தக நிலையங்கள், அரச அலுவல்களையும் மூடி வாகனங்களை பயனிக்காது நிறுத்தி ஹர்தல் அனுஸ்திக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இக் ஹர்தல் அழைப்பை புறக்கணித்து தமிழ்,முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையின் பலத்தை நிரூபிக்கும் வகையில் கிழக்கு மாகாணம் முழுவதுமாக வழமை போன்று கடைகள் திறக்கப்பட்டு போக்குவரத்து சீராக இடம்பெற்றது.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் அதிகமான முஸ்லிம் பகுதிகளில் வழமையான விடுமுறையாக இருந்த போதிலும் தமிழ் சமூகத்துடன் சகோதரத்துவத்தை பேனும் வகையில் தைப் பொங்கல் தினத்திற்கான கொள்வனவுகளை இலகு படுத்தும் நோக்கில் அதிகமான முஸ்லிம் பகுதிகளில் வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன…

தனிப்பட்ட அரசியல் இலாபத்தை பெறும் நோக்கத்தில் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலைகளை தூண்டிவிட்டு சுகம் அனுபவிக்கும் அறிவிலிகளுக்கு இன்றைய எடுத்துக்காட்டு பதில் அடியாக இருக்கும் என சமூகவியலாளர்களால் கூறப்படுகிறது..

Web Design by The Design Lanka