கப்பல் துறை பிரதி அமைச்சர் திங்கட் கிழமை கடமைகளை பொறுப்பேற்பார். » Sri Lanka Muslim

கப்பல் துறை பிரதி அமைச்சர் திங்கட் கிழமை கடமைகளை பொறுப்பேற்பார்.

FB_IMG_1547185589441

Contributors
author image

Hasfar A Haleem

துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சராக நேற்று வெள்ளிக் கிழமை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்து கொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹரூப் அவர்கள் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக நாளை மறு தினம் திங்கட் கிழமை (14) காலை 11.00 மணிக்கு கொழும்பு-01 ல் அமைந்துள்ள துறை முகங்கள் கப்பல் துறை அமைச்சில் உள்ள அலுவலகத்தில் வைத்து கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக பிரதி அமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ் நிகழ்வில் துறை முகங்கள் கப்பல் துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க உட்பட அமைச்சின் செயலாளர், கட்சி ஆதரவாளர்கள், பிரதி அமைச்சரின் உறவினர்கள் என பலரூம் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka