அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 68வது வருடாந்த மாநாடு முதன் முறையாக கிழக்கில் ... » Sri Lanka Muslim

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 68வது வருடாந்த மாநாடு முதன் முறையாக கிழக்கில் …

YMMA

Contributors
author image

S.Ashraff Khan

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 68வது வருடாந்த பொதுக் கூட்டம் இம்முறை வரலாற்றில் முதன் முறையாக கிழக்கு மாகாணத்தின் ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஜூலை 15ம் திகதி நடைபெறவுள்ளதாக பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் ஸஹீட் எம். றிஸ்மி தெரிவித்தார்.

பேரவையின் தேசியத் தலைவர் தொழிலதிபர் தேசபந்து எம்.என்.எம்.நபீல் தலைமையில் இடம்பெறும் இம் மாபெரும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ்வும், கெளரவ அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் சிறியாணி விஜேவிக்ரம, பிரதியமைச்சர் பைசால் காசீம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

இதில் அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. கிளைகளுக்களில் சிறப்பாக செயற்பட்டுவருகின்ற இளைகளுக்கான விருதுகள், ஒவ்வொரு கிளைகளிலும் சிறப்பாக செயற்படும் தலைவர், செயலாளர், பொருளாளர்களுக்கான விருதுகள் மற்றும் விசேட விருதுகளும் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சகல பாகங்களிலுமிருந்து சுமார் 100 அங்கத்துவ வை.எம்.எம்.ஏ.களின் பிரதானிகள், முக்கிய பிரமுகர்கள் எனப்பலரும் இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

விசேடமாக இம்மாநாட்டில் மேலும் பல கலாச்சார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka