நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்த பேச்சுவார்த்தை வேண்டும் » Sri Lanka Muslim

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்த பேச்சுவார்த்தை வேண்டும்

1547208983-ranilw-parlment-2

Contributors
author image

Editorial Team

நாட்டை பிளவுபடுத்துவதற்கோ பௌத்த மதத்திற்கு உரித்தான பிரதான இடத்தை இல்லாமல் ஆக்குவதற்கான ஏற்பாடுகளோ புதிய அரசியல் அமைப்பில் எந்தவொரு இடத்திலும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரசியல்அமைப்புசபை  பாராளுமன்றில் கூடியது இதன் போது பிரதமர் உரையாற்றுகையில்,

நாட்டின் ஒற்றையாட்சியை, பாதுகாப்பதற்கு, அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நாட்டிற்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது, தேர்தல் முறை, நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறையை நீக்குதல் போன்றன தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

பௌத்த மதத்திற்கான பிரதான இடத்தை நீக்குவதற்கு எந்தவித யோசனைகளும் இல்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்திற்கான பிரதான இடத்தை நீக்குவதற்கு புதியஅரசியல் அமைப்பின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிலர் முன்வைக்கும் கருத்தில் உண்மை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் ஆழமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு சமூகத்திற்கு ஒரு முறையிலும், வேறொரு சமூகத்திற்கு இன்னுமொரு விதத்திலும் உரிமைகள் வழங்குவதற்கு முயற்சிக்க வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார். எந்த சமூகத்தினருக்கும் வேறொரு சமூகத்திற்கு தீங்கு செய்வதற்கான உரிமை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் அமைப்பு பேரவையின் நடவடிக்கைகளை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமாயின், வழி நடத்தல்குழுவின் ஊடாக அரசியல் அமைப்பு சபைக்கு பிரேரணையொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கான அவசியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பை ஏற்க முடியுமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

(அரச தகவல் திணைக்களம்)

Web Design by The Design Lanka