புதிய ஆளுநருக்கு அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா வாழ்த்து » Sri Lanka Muslim

புதிய ஆளுநருக்கு அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா வாழ்த்து

FlyerMaker_12012019_124933

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கடந்த வாரம் கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநராக அல் ஹாஜ் கலாநிதி MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நியமனம் பெற்றதையிட்டு அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா உளம் கனிந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றது என மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் SH. ஆதம்பாவா மதனி MA அதன் செயலாளர் அஷ்ஷெய்க் AL. நாஸிர்கனி (ஹாமி) MA ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

1987 ஆம் ஆண்டின் 13வது யாப்பு சீர் திருத்தத்திற்கமைவாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் வரலாற்றில் நான்காவது நபராக தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் இவ்வுயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை நீதியானதும் நியாயமானதுமான ஒரு நடவடிக்கையாகும்.

இதற்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநர்களாக சிங்கள மொழி பேசும் கௌரவ மொஹான் விக்ரம, கௌரவ ஒஸ்டின் பெர்னாண்டோ, கௌரவ ரோஹித போகொல்லாகம ஆகியோர் செயற்பட்ட நிலையில், தமிழ் மொழி பேசுவோரை பெரும்பான்மையாகக்கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தில் அம்மொழியைப் பற்றி நன்கு தெரிந்தவரும் அப்பிரதேசத்தில் வசிப்பவருமான இராணுவப் பின்புலனற்ற அல் ஹாஜ் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு இந்நியமனத்தை வழங்கிய தீர்க்கதரிசனமிக்க மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றது.

மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா, 1989 ஆம் அண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் பதவி வகித்து அளப்பெரிய சேவைகளைச் செய்துள்ளார். கிழக்கு மாகாண சபையிலும் சபை உறுப்பினராக பொறுப்பு வகித்துள்ளார். இத்தனை நீண்டகால அரசியல் அனுபவமுள்ள இவர் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம், தமிழ், சிங்கள மக்கள் அனைவரையும் சமமாக மதித்து சம உரிமையுடன் நடாத்துவதுடன் யுத்தத்தால் உருக்குலைந்து போயுள்ள உள்ளங்களையும் உடமைகளையும் மீளமைத்து கிழக்கு மாகாணத்தை முன்னுதாரணமுள்ள சமாதான, வளமும் செழிப்பும் மிக்க பூமியாக மாற்றியமைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு புதிய ஆளுநருக்கு உண்டு என ஆலோசனை வழங்குகிறது.

தகவல்:
அஷ்ஷெய்க் ACM இம்தாத் (ஹாமி) BA
மாவட்ட இணைப்பாளர்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா,
அம்பாரை மாவட்டம்.

Web Design by The Design Lanka