முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: தீர்வு காண டிரம்புக்கு அழுத்தம் » Sri Lanka Muslim

முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: தீர்வு காண டிரம்புக்கு அழுத்தம்

_105170389_getttttt

Contributors
author image

BBC

கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அமெரிக்க அரசாங்க துறைகள் பகுதியளவு முடங்கியுள்ள சூழலில், இவற்றில் சில பகுதிகளை தற்காலிகமாக மீண்டும் திறக்க வேண்டுமென குடியரசு கட்சியை ஓர் மூத்த செனட்டர், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

டிரம்புக்கு மிகவும் நெருக்கமான லிண்ட்ஸே கிரஹாம் என்ற அந்த செனட்டர், சில வாரங்களுக்கு மீண்டும் சில துறைகளை இயக்குவது குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளுக்கு இடையே இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்க துறைகள் தற்போது பகுதியளவு முடங்கியுள்ளதுதான் அமெரிக்க அரசாங்க வரலாற்றில் நடந்த மிக நீண்ட முடக்கமாக கருதப்படுகிறது.

16 நாட்கள் நீடித்த கடைசி அரசாங்க பணி முடக்கம் 2013 இல் நிகழ்ந்தது.

முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: தற்காலிக தீர்வு காண டிரம்புக்கு கோரிக்கைபடத்தின் காப்புரிமைREUTERS

அமெரிக்காவில் அரசுத்துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பல்வேறு துறைகளை சேர்ந்த 8 லட்சம் ஊழியர்கள் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.

மெக்சிகோ எல்லையில் சுவர்கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.

“கவர்ன்மென்ட் ஷட் டவுன்” என்று கூறப்படும், அரசுப் பணிகள் முடக்கம், அமெரிக்காவுக்கு புதிதில்லை என்றபோதும், தற்போது அது 15 நாட்களாகத் தொடர்ந்து வருவது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படாததால், அதன் மோசமான விளைவுகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

கவர்ன்மென்ட் ஷட் டவுன் என்று கூறப்படும், அரசுப் பணிகள் முடக்கம், அமெரிக்காவுக்கு புதிதல்ல என்றபோதும், தற்போது அது மூன்று வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருவது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கம் செயல்படாமல் இருப்பதன் விளைவாக தாங்கள் மோசமான விளைவுகளை சந்திப்பதாக மக்கள் சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: தற்காலிக தீர்வு காண டிரம்புக்கு கோரிக்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம், வீட்டு வசதி, விவசாயம், வணிகம் உள்ளிட்ட ஒன்பது துறைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஊழியர்கள் இல்லாததால் பூங்காக்களில் குப்பைகள் மலை போல குவிந்துள்ளன.

Web Design by The Design Lanka