காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் Inbox » Sri Lanka Muslim

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் Inbox

1 (2)

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

காத்தான்குடி, மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களிடையே நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர், உறுப்பினர்கள், காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலய பொறியியலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள 8 மாடிக் கட்டிட நிர்மாணப் பணிகள் தொடர்பாகவும், நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 4 மாடிக் கட்டிட வேலைகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.

அத்துடன், பாடசாலையில் தற்போதுள்ள நூலகத்தை விரிவுபடுத்தல், பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா, வாகன தரிப்பிடம் மற்றும் பார்வையாளர் அரங்கு நிர்மாணிப்பது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

5

Web Design by The Design Lanka