பொலிஸாரைக் கண்டதும் ஓடிய மாடு வெட்டியோர் இடையில் ஏற்பட்ட விபத்தால் மாட்டிக் கொண்டனர் » Sri Lanka Muslim

பொலிஸாரைக் கண்டதும் ஓடிய மாடு வெட்டியோர் இடையில் ஏற்பட்ட விபத்தால் மாட்டிக் கொண்டனர்

cow (1)

Contributors
author image

Farook Sihan - Journalist

ஊர்காவற்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சரவணை வடக்கு நாரந்தனை அல்லைப்பிட்டி வேலணை கிழக்கு போன்ற பகுதிகளில் களவாக மாடு வெட்டி இறைச்சி ஆக்கிய இருவர் பொலிஸாரிடமிருந்து தப்பித்துச் செல்லும் போது விபத்திற்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களவாக மாடு வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக ஊர்காவற்துறைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை அடுத்து பொலிஸார் தேடுதலை நேற்றிரவு(7) நடத்தினர்.

இதன் போது 107 கிலோ சட்டவிரோத இறைச்சியுடன் இளைஞர்கள் இருவர் ஒரு உந்துருளியில் செல்வதைப் பொலிஸார் அவதானித்து இருவரையும் பொலிஸார் விரட்டினர்.

இதன் போது குறித்த உந்துருளியில் வேகமாக வந்த இளைஞர்கள் மண்டைதீவுச் சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவல் அரண் மேசையுடன் மோதுண்டுள்ளனர்.

இதனை அடுத்து காயமடைந்த இருவரையும் பொலிஸார் கைது செய்து வைத்தியசாலையில் பின்னர் சேர்ப்பித்தனர்.

Web Design by The Design Lanka