யாழில் ஒரு தொகை மீன்களுடன் பிடிபட்ட இந்திய மீனவர்கள் » Sri Lanka Muslim

யாழில் ஒரு தொகை மீன்களுடன் பிடிபட்ட இந்திய மீனவர்கள்

fish (2)

Contributors
author image

Farook Sihan - Journalist

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் வைத்து இன்று (8) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகு மற்றும் சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களும், அவர்களால் பிடிக்கப்பட்ட மீன்களும் கைப்பற்றப்பட்டன

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படுவர் என்றும் இலங்கைக் கடற்படையினர் கூறினர்.

இதே குற்றச்சாட்டில் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

fish (2)

_DSC07

Web Design by The Design Lanka