பிரதமரை ​வேவு பார்த்தால் மஹேந்திரன் மாட்டுவார்’ » Sri Lanka Muslim

பிரதமரை ​வேவு பார்த்தால் மஹேந்திரன் மாட்டுவார்’

sunil

Contributors
author image

Editorial Team

சிங்கப்பூருக்குச் சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பின்தொடர்ந்தால், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனைக் கண்டறியலாமென, ஜே.வி.பி ஆலோசனை கூறியுள்ளது.

ஜே.வி.பி தலைமையகத்தில்  (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, ஜே.வி.பியின் எம்.பியான சுனில் ஹந்துநெத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்கப்பூரில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள பிரதமர், அங்கு அர்ஜுன மஹேந்திரனைச் சந்திக்கக்கூடும் என ஆரூடம் கூறியுள்ள சுனில் ஹந்துநெத்தி, பிரதமரைப் பின்தொடர்ந்தால் அர்ஜுன மஹேந்திரன் இருக்குமிடம் தெரியவரும்” என்றார்.

மேலும், “அர்ஜுன மஹேந்திரனை, இலங்கைக்கு அழைத்து வருமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சவால் விடுத்திருந்தார். அந்தச் சவாலை ஏற்று, அவரை அழைத்து வருவதற்கு, பிரதமர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Web Design by The Design Lanka