போட்டியிட தலைமைத்துவம் அனுமதி வழக்கியுள்ளது - ஹில்மி » Sri Lanka Muslim

போட்டியிட தலைமைத்துவம் அனுமதி வழக்கியுள்ளது – ஹில்மி

FB_IMG_1531103042248

Contributors
author image

எப்.முபாரக்

 எதிர் வருகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நான் தேர்தலில் போட்டியிட தலைமைத்துவம் அனுமதி வழக்கியுள்ளதாக கிண்ணியா நகர சபையின் முன்னால் நகர பிதாவும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளருமான சட்டத்தரணி ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.

கந்தளாயில் ஞாயிற்றுக்கிழமை (8) இரவு மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:மாகாண சபைத் தேர்தல் பெரும் பாலும் பழைய முறையிலே நடைபெறவுள்ளதோடு,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுத்தீன் திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை வேற்பாளராக போட்டியிட நேரடியாக அனுமதி வழங்கியுள்ளதாகவும்,கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பில் அமைந்துள்ள அமைச்சர் அமிர் அலியில் வீட்டில் வைத்து கட்சி முக்கியஸ்தகர்களுடனான சந்திப்பில் இத்தீர்மானம் எட்டப்பட்டதாகவும்,தமக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மூதூரில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திடீர் தௌபீக்கையும்,முன்னால் முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜித் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக இணைந்து போட்டியிடுவது தொடர்பாக தேசியத் தலைவர் றிஷாத் பதியுத்தீனுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தீர்வு எட்டப்பட்டால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவார் எனவும் சட்டத்தரணி ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.

தேர்தலில் எந்த கட்சி சார்பாக போட்டியிடுவது சம்பந்தமாக இன்னும் தீர்மானிக்க வில்லையென்றும் கட்சி உயர்பீடம் சரியான சரியாக தீர்மானிக்கும் என்றும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் தான் என்றும் கட்சியின் தலைமைத்துவம் அதனை நன்றாக அறிந்து வைத்துள்ளதாகவும் அரசியல் பரம்பரைக்கு இடமில்லையென்றும், மற்றவர்களுக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படல் வேண்டும் என்றும் தலைமைத்துவம் கூறியதாகவும் சட்டத்தரணி ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கந்தளாய் சமூர்த்தி அதிகாரி,மற்றும் கந்தளாய் பேராறு மேற்கு வட்டார அரசியல் உறுப்பினர்கள்,கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Web Design by The Design Lanka