பாதாள உலகம் » Sri Lanka Muslim

பாதாள உலகம்

shoot

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


ஒருவர் நடத்த
ஒருவர் கடத்த
கோடிக் கணக்கில்
தேடலாம் ஆடலாம்

ஒருவர் சொல்ல
ஒருவர் கொல்ல
இருளின் உலகில்
போடலாம் தேடலாம்

கட்டுப் பணத்துக்காய்
கெட்டுப் போவார்கள்
வெட்டிக் கொள்வார்கள்
சுட்டும் கொல்வார்கள்
பணத்துக்காய் பாதகங்கள்
செய்து திரிவோர்கள்
பிணத்துக்கும் ஆளின்றி
பிறகு கிடப்பார்கள்

சொத்தி உபாலீக்கள்
சுனில் பாஜீக்கள்
கெத்தாய் வாழ்ந்தோர்கள்
கெதியாய் மறைந்தார்கள்.
சில நாட்கள் ஆடிய பின்
சீக்கிரம் மறைவார்கள்
இது போல வாழ்ந்ததனால்
என்ன கண்டார்கள்?

பின்னால் இருப்பார்கள்
பிரபலத் தலைவர்கள்
பின்னல் ஏதுமென்றால்
பிணையில் எடுப்பார்கள்
அநியாயம் பல செய்து
அவ்டியில் போவதிலும்
வெறுப்பின்றி வாழ்ந்திங்கு
செருப்பின்றி செல்லல் மேல்

Web Design by The Design Lanka