சாய்ந்தமருது மத்தியஸ்தர் சபையின் தவிசாளராக அஸ்மீர் நியமனம் » Sri Lanka Muslim

சாய்ந்தமருது மத்தியஸ்தர் சபையின் தவிசாளராக அஸ்மீர் நியமனம்

Contributors
author image

Aslam S.Moulana

சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கான மத்தியஸ்தர் சபையின் புதிய தவிசாளராக சேகு இஸ்மாயில் அஸ்மீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2019.01.15ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017.09.27ஆம் திகதி மத்தியஸ்த சபை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் சாய்ந்தமருது பிரதேச மத்தியஸ்தர் சபைக்கு 56 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு, மத்தியஸ்தர் பணி தொடர்பிலான பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற எழுத்துப் பரீட்சையின் பிரகாரம் தேர்வு செய்யப்பட்டு, இம்மத்தியஸ்தர் சபையின் தவிசாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது-04 ஆம் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த இவர் தொழில் வழிகாட்டல் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் சமூக பொருளாதார அபிவிருத்தி பயிற்சியாளராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka