புற்று நோய்க்கான சிகிச்சை பிரிவு » Sri Lanka Muslim

புற்று நோய்க்கான சிகிச்சை பிரிவு

DSC_3443

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புற்று நோயாளர்களுக்கான சிகிச்சை பிரிவு இன்று (09) வைத்திய கலாநிதி டொக்டர் கனேகபாகுவினால் திறந்து வைக்கப்பட்டது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச்சேர்ந்த மக்கள் கொழும்பு மகரகம மற்றும் அனுராதபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்று மருந்துகளை பெற்று வந்தனர்.

நோயாளர்களின் நலன்கருதி 72 இலச்சம் ரூபாய் செலவில் திறந்து வைக்கப்பட்ட
இப்பிரிவு புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மருந்து வகைகளை கலக்குவதற்கும், தூர இடங்களிலிருந்து வரும் நோயாளர்களின் நலன் கருதியும் உடனே மருந்துகளை கலக்கி நோயாளர்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இப்பிரிவு உருவாக்கப்பட்டதாகவும் வைத்திய நிபுனர் டொக்டர் கனேகபாகு குறிப்பிட்டார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புற்று நோய் சிகிச்சை பிரிவு இல்லாமைசெயினால் நோயாளர்களின் மருந்துகளை கலக்குவதற்காக மருந்தாளர்கள் பொலன்னநுவை,அனுராதபுரம் போன்ற மாவட்டங்களுக்கு சென்று கடந்த ஒரு வருட காலமாக மருந்துகளை கலக்கி வந்ததாகவும் மருந்தாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டமையினால் மிக குறுகில காலத்திற்குள் மருந்துகளை கொடுத்து வீடுகளுக்கு அனுப்ப முடியும் எனவும் உங்களுக்கு தெரிந்த நோயாளர்கள் இருந்தால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் வைத்திய கலாநிதி டொக்டர் கனேகபாகு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்வில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புற்று நோய் பிரிவின் வைத்திய கலாநிதி என்.ஜெயக்குமார் திருகோணமலை பொது வைத்தியசாலை புற்று நோய் சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் எப்.சசிகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

DSC_3443

Web Design by The Design Lanka