07 முஸ்லிம் மாணவர்களையும், மன்னித்து விட்டுவிடுங்கள் - Dr. குணசிங்கம் சுகுணன் உருக்கமான கோரிக்கை » Sri Lanka Muslim

07 முஸ்லிம் மாணவர்களையும், மன்னித்து விட்டுவிடுங்கள் – Dr. குணசிங்கம் சுகுணன் உருக்கமான கோரிக்கை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இந்த பௌத்த அடையாளம் ஒன்றின்மீது சப்பாத்து காலுடன் ஏறிநின்று அவமதித்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களாகவே முகநூலில் தரவேற்றிய புகைப்படம் ஒன்றை ஆதாரமாக வைத்து கைது செய்துள்ளீர்கள்.

இது சுற்றுலா சென்ற மாணவர்கள் அறியாது விட்ட தவறு.

கடந்த காலத்தில் தமிழ் சிறுமி ஒருவர் சிகிரியா குன்றில் எழுதியதாக பேரினவாதம் சிலிர்த்துக் கொண்டபோது மூதன்முதலில் குரல்கொடுத்தவர்கள் முஸ்லிம் மக்களே.

சிங்களவர்கள் எங்கள் கோவில்களுக்குள் சப்பாத்து கால்களுடன் எத்தனை தடவை மிதித்தீர்கள்? பள்ளிகளையும் கோவில்களையும் எத்தனை எத்தனை தரம் இடித்தீர்கள்? இன்றுவரை எத்தனை முஸ்லிம்களின் வியாபார தலங்கள் அறியா காரணங்களால் எரிந்து போகிறது. காரணத்தை கண்டுபிடித்தீர்களா?

மாணவர்களை நெறிப்படுத்த வேண்டுமேயன்றி அவர்களின் ரோச உணர்வுகளை உரஞ்சி தீவிரவாத எண்ணங்களை விதைத்து விடாதீர்கள்.மனிதன், மாணவன் என்று நடவுங்கள்.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய சிங்கள மாணவனுக்கு விருது வழங்கி கௌரவித்தவர்கள் நீங்கள்.

விட்டுவிடுங்கள் நாளை அவர்கள் இலங்கையன் என்ற மனநிலையோடு வாழட்டும்.

மகிழ்ச்சி

Dr. குணசிங்கம் சுகுணன்
வைத்திய அத்தியட்சகர்
ஆதார வைத்தியசாலை
களுவாஞ்சிகுடி.

Web Design by The Design Lanka