கல்முனை மாணவன் ஓட்டமாவடி தாருஸ்ஸலாமில் சாதனை. » Sri Lanka Muslim

கல்முனை மாணவன் ஓட்டமாவடி தாருஸ்ஸலாமில் சாதனை.

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எச்.எம்.எம்.பர்ஸான்)


ஓட்டமாவடி – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் கல்வி கற்கும் 171, E/4 காசிம் வீதி கல்முனைக்குடி 10, எனும் முகவரியைச் சேர்ந்த ஜமீல் முகம்மத் ரிப்அத் ஸம்லி என்ற மாணவன் குறுகிய காலத்தில் அல்குர்ஆனை பூரணமாக மனனம் செய்து சாதனை புரிந்துள்ளார்.

கிதாபு மற்றும் ஹிப்ழு பிரிவுகளை உள்ளடக்கி மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வரும் குறித்த அரபுக் கல்லூரியில் இதற்கு முன்னரும் பல மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி தற்போது உள்ளாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் தங்களுடைய உயர் கல்விகளைக் கற்று வருகின்றனர்.

குறித்த கல்லூரியில் 23 வது ஹாபிழாக குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து சாதனை படைத்துள்ள மாணவன் ஜமீல் முகம்மத் ரிப்அத் ஸம்லியின் எதிர்காலம் சிறப்பாக அமைய அனைவரையும் பிரார்த்திக்குமாறு கல்லூரியின் நிருவாகத்தினர் வேண்டிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka