கொழும்பு-12, வாழைத்தோட்டம்: 'போதையற்ற தேசம்' » Sri Lanka Muslim

கொழும்பு-12, வாழைத்தோட்டம்: ‘போதையற்ற தேசம்’

Contributors
author image

A.S.M. Javid

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் ‘போதையற்ற தேசம்’ எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இவ்விழிப்புணர்வு நிகழ்வுகளை அரசாங்கம் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் மேற்கொள்ளுமாறு வழங்கப்பட்ட அறிவறுத்தல்களுக்கு அமைய தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரம் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று (25) இறுதிநாள் நிகழ்வுகள் கொழும்பு-12, வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியில் பாடசாலை அதிபர் மஹ்ஷூர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளரும், யு.ரி.வியின் தயாரிப்பாளருமான பிஸ்ரின் முஹமட் ஊடகங்கள் மூலம் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது மற்றும் அதன் விபரீதங்கள் தொடர்பாக மாணவர்களுக்கான விளக்கத்தை வழங்கினார்.

IMG_4677 IMG_4731

Web Design by The Design Lanka