பொரல்ல அஹதிய்யாவின் 30 வருட நிகழ்வு » Sri Lanka Muslim

பொரல்ல அஹதிய்யாவின் 30 வருட நிகழ்வு

Contributors
author image

A.S.M. Javid

பொரல்ல அஹதிய்ய மற்றும் இஸ்லாமிய கல்வி நிலையமும் இணைந்து பொரல்ல அஹதிய்யாவின் 30 வருட நிகழ்வை நேற்று அஹதிய்யாவின் அதிபர் ஷிப்லி ஹாசிம் தலைமையில் நேற்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நீதியரசர் எம்.எம்.அப்துல் கபூரும் கௌரவ அதிதிகளாக புரவலர் ஹாசிம் உமர், கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம.ரி.எம். இக்பால், இலங்கை றிபாய் தங்கள் சங்கத்தின் அல்-ஹாஜ் முஹம்மட் ஆசிக் தங்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அஹதிய்யாவின் 30வருட பூர்த்தியை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட தீனொளி நினைவு மலரை பிரதம அதிதி உள்ளிட்டவர்கள் புரவலர் ஹாசிம் உமரிடம் வழங்கப்படுவதையும், அஹதிய்யாவின் அதிபர் பிரதி மேயருக்கு நினைவு மலரையும் நினைவுப் பரிசினையும் வழங்குவதையும், இஸ்லாமியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவுச் சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் அஹதிய்யா மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்வுகளும், சமுக நாடகங்களும் மேடையேற்றப்பட்டன.

IMG_4852 IMG_4881 IMG_4906

Web Design by The Design Lanka