லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட இஜ்திமா » Sri Lanka Muslim

லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட இஜ்திமா

201901270115039178_Millions-of-Muslims-took-part-in-the-convention-of-Trichy_SECVPF

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

திருச்சி அருகே லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை மாநாட்டு திடலில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. மார்க்க அறிஞர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினர்.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்த இஜ்திமா திங்கட்கிழமை வரை நடைபெறுகிறது.இலங்கை, சவுதி அரபேபியா, மலேசிய, சிங்கப்பூர்
உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.

முஸ்லிம்கள் மாநாட்டை (இஜ்திமா) இந்த ஆண்டு திருச்சி அருகே இனாம்குளத்தூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்கள் தலைமையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தொடங்கின. இதற்காக திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டிபுதூரில் இருந்து இனாம்குளத்தூர் வரை லட்சக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் பல ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. குடிநீர் வசதி, குளியல் அறை, உணவு, கழிவறை, தூங்குவதற்கான இடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாநாட்டு திடல் மற்றும் மக்கள் வந்து செல்லும் பகுதி முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இவை பார்ப்பதற்கு இரவை பகலாக்கும் வகையில் உள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, சவுதி அரபேபியா, மலேசிய, சிங்கப்பூர்
உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.

இதைத்தொடர்ந்து சனிக்கிழமை காலை பஜ்ரு தொழுகைக்கு பிறகு சிறப்பு துஆவுடன் இஜ்திமா மாநாடு தொடங்கியது. அதைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை இஜ்திமா மாநாட்டு திடலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சாரை, சாரையாக வாகனங்களில் முஸ்லிம்கள் மாநாட்டு திடலுக்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். மாநாட்டு திடலில் நேற்று நடைபெற்ற 5 வேளை தொழுகையில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். அதன்பிறகு மார்க்கம் சார்ந்த சொற்பொழிவுகள் நடைபெற்றன. சிறப்பு நிகழ்வாக நேற்று மாலை மாநாட்டு திடலிலேயே 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு நபிவழி சுன்னத்தை பின்பற்றிடும் வகையில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு, மாநாட்டு திடலில் அமர்ந்து இருந்தவர்கள் மணமகன்களை கட்டித்தழுவியும், மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர் கவிஞர் சையது ஜாபர், தெற்கு மாவட்ட பொருளாளர் பி.எம். ஹுமாயூன், மாநில எம்.எஸ்.எப். பொதுச்செயலாளர் அன்சர் அலி, திருச்சி மண்டல யூத் லீக் ஓருங்கிணைப்பாளர் என்.கே. அமீருதின், எம்.எல்.எஸ். தலைவர் முனைவர் முஹம்மது உஸ்மான், தெற்கு மாவட்ட எம்.எஸ்.எப். நிர்வாகி பாசில் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள்.

3-வது நாளான இன்று(திங்கட்கிழமை) இஜ்திமா மாநாடு நிறைவு பெறுகிறது. மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு துஆ இன்று மதியம இறுதியில் உலக நாடுகளில் அமைதி வருவதற்கும்மத நல்லிணக்க வளர வேண்டும் என்றும் சிறப்பு பிரார்த்தனை ஓதப்படுகிறது.

இந்த துஆவில் கலந்து கொள்வதற்காக மேலும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மாநாட்டு திடலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அந்தந்த மாவட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள உணவகத்தில் உணவு வழங்கப்பட்டது. உணவு தயார் செய்யும் பணியும் 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகிறார்கள். உணவு தயார் செய்வதற்கு தேவையான சமையல் பொருட்கள் வைப்பதற்கு தனியாக இடம் அமைத்து, அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டில் பங்கேற்றுள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்களின் பயன்பாட்டுக்காக அங்கு தற்காலிக நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நீர்த்தேக்கங்களில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தொழுகைக்கு முன்னதாக அந்த தண்ணீரில் முகம், கை, கால்களை கழுவி ஒது செய்து கொள்கிறார்கள். மேலும், அவசர ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு திடலை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளில் உணவு, குடிநீர் மற்றும் ஏராளமான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. மாநாட்டு திடலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான வாகனங்களை முறைப்படுத்தி, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த வாகனங்களுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கி நிறுத்தி வைக்கப்படுகிறது. வாகனங்களை முறைப்படுத்தும் பணியிலும், போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் இஸ்லாமிய இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாநாட்டில், இறைவன் கட்டளையை நிறைவேற்றி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கை முறையை பின்பற்றி அனைவரும் வாழ வேண்டும், மறுமை வாழ்வை நினைத்து அதற்கு தகுந்தாற்போல் எப்படி வாழ வேண்டும், சகோதரத்துவம், மனிதநேயம், மனிதாபிமானம், நல்லொழுக்கம், ஒற்றுமை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, அனாதைகளை ஆதரித்தல், ஏழை-எளியோருக்கு உதவுதல், மகளிருக்குரிய உரிமை மற்றும் சலுகைகளை இஸ்லாமியம் அருளியபடி முறையாக கொடுத்து அவர்களை கவுரவப்படுத்துவது, குழந்தை வளர்ப்பு முறை பற்றி போதித்தல், வணிகத்தில் நேர்மை, கொடுக்கல்-வாங்கலில் நேர்மை, மது இல்லா வாழ்வு, உயரிய பண்பாட்டோடு வாழ்வது, இழிவு பேசுவதை தவிர்த்து வாழ்வது குறித்து தினமும் சொற்பொழிவு நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள புகழ்பெற்ற மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். இதேபோல பஜ்ர், லுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகிய 5 வேளை தொழுகையும் மாநாடு திடலில் நடைபெற்றது.

வளர்ந்து வரும் நாகரிக உலகில் பிரமாண்டமான முறையில் திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு மாறாக நபிவழி சுன்னத் என்பதன் அடிப்படையில் எளிமையான முறையில் ஞாயிற்றுக்கிழமை மாநாட்டு திடலில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் இனாம்குளத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதால் ரெயில் மூலமும் அதிக அளவில் முஸ்லிம்கள் வந்தவண்ணம் உள்ளனர். மாநாட்டையொட்டி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.வரதராஜூ தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி இஜ்திமாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த இலியாஸ்கான் என்ற முதியவர் இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி காெளத்தூா் பொிய பள்ளிவாசல் கபா்ஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நல்லடக்கத்தில் பலர் கலந்து கொண்டு அவருடைய மஃகாபிருத்துக்காக து ஆ செய்தார்கள். இந்த திடலில் மருத்துவ துறை சார்பில் பல்வேறு மருத்தவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

201901270115039178_Millions-of-Muslims-took-part-in-the-convention-of-Trichy_SECVPF FB_IMG_1548604158755 IMG-20190127-WA0237 IMG-20190127-WA0344 IMG-20190127-WA0413

Web Design by The Design Lanka