ஹிப்ழ் குர்ஆன் போட்டி » Sri Lanka Muslim

ஹிப்ழ் குர்ஆன் போட்டி

Contributors
author image

A.S.M. Javid

மனிதாபிமானத்திற்கான நிவாரண அமைப்பு (எச்.ஆர்.எப்) தற்போது பல்வேறுபட்ட மனிதாபிமானப் பணிகளை இன, மத வேறுபாடின்றி பாதிக்கப்படும் மக்களுக்கு உடநடியாகச் செய்து வருகின்றது.

இதன் அடிப்படையில் புனித அல்-குர்ஆனை மனனம் செய்யும் மாணவர்களுக்கு அன்மையில் ஹிப்ழ் குர்ஆன் போட்டி ஒன்றை நடாத்தியது. குறித்த போட்டியில் பலநூற்றுக் கணக்கான மாணவர்கள் பங்குபற்றி தமது திறமைகளைக் காட்டியுள்ளனர்.

இவ்வாறு தமது அதிக திறமைகளைக் காட்டிய சுமர் 100 மாணவர்களுக்கு இன்று நற்சான்றுப் பத்திரங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பணப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் முதல் தர 15 மாணவர்களுக்கு புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான விமானப் பயணச் செலவிற்கான பணத் தொகையும் வழங்கிவைக்கப்பட்டதுடன் அதிதிகளுக்கும் அமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

கொழும் மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாக மண்டபத்தில் இன்று அமைப்பின் தலைவர் ஹனீப் ஹாஜியார் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கைத்தொழில், வர்த்தக, நீண்டகால இடம் பெயதர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்ற மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரைக்கார்,இஷாக் றஹ்மதுல்லா,மேல்மாகாண சபை உறுப்பினர் முஹமட் பாயிஸ், மனிதாபிமானத்திற்கான நிவாரண அமைப்பின் உறுப்பினர்கள், பள்ளிவாசல்களின் நிருவாக சபை உறுப்பினர்கள், அரபுக் கல்லூரிகள், குர்ஆன் மத்ரஸாக்களின் அதிபர்கள், பிரதிநிதிகள், உலமாக்கள், மௌலவிமார்கள், நலன் விரும்பிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

7M8A6282 7M8A6302 DSC08694 IMG_5121 IMG_5143 IMG_5160 IMG_5583

Web Design by The Design Lanka