தெஹிவளை: அல் ஜாமியத்துல் கௌஸிய்யாஹ் வின் 10வது பட்டமளிப்பு » Sri Lanka Muslim

தெஹிவளை: அல் ஜாமியத்துல் கௌஸிய்யாஹ் வின் 10வது பட்டமளிப்பு

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

தெஹிவளை ஹில் வீதியில் உள்ள அல் ஜாமியத்துல் கௌஸிய்யாஹ் வின் 10வது பட்டமளிப்பு வைபவம் (27) அரபு கல்லுாாியில் நடைபெற்றது.

1996ஆம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் அரபு கலாசாலை, இதுவரை 80 ஆலிம்களையும் 61 ஹாபிழ்களையும் உருவாக்கியுள்ளது.

10 வது பட்டமளிப்பு வைபவத்தில் 2017-18ஆம் ஆண்டுகளில் 11 மௌலவிமாா்களையும் 6 ஹாபிழ்கள், தலைப்பாகை சூடும் மாணவா்கள் 6 மாணவா்களுக்கும் சான்றிதழ்களும் குர்ஆன் அன்பளிப்புக்களும் கல்லுாாி அதிபா் முஹம்மத் ஸபஸல் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்த (பூக்கோயாத தங்கள் ஏ.எல் ஹஸன், அவரின் சகோதரா் ஏ.ஜ. ஹுஸைன் , இக் கல்லுாாியின் நிருவாகத் தலைவா் எம்.எச் ஹாஜா ஹசைன், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளா், இக் கல்லுாாியின் ஆலோசகா் மௌலவி எம்.எச். ஹில்மி அவா்களும் கலந்து கொண்டு பட்டம் பெற்று வெளியேறும் மௌலவிமாா்களுக்கு சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தனா்.

za1 za3 za4 za5 ZA15 (1)

Web Design by The Design Lanka