ஊடகவியலாளர்கள் இங்கேயாவது நிம்மதியாக இருந்து , கலகலப்பாக உரையாடி, உணவருந்தி செல்லட்டும் » Sri Lanka Muslim

ஊடகவியலாளர்கள் இங்கேயாவது நிம்மதியாக இருந்து , கலகலப்பாக உரையாடி, உணவருந்தி செல்லட்டும்

IMG_4698

Contributors
author image

A.H.M.Boomudeen

ஊடகவியலாளர்கள் இங்கேயாவது நிம்மதியாக இருந்து , கலகலப்பாக உரையாடி, உணவருந்தி செல்லட்டும்ஹாசிம் உமரின் இப்தார் பிரயோசனமிக்கது ..!

புரவலர் ஹாசிம் உமர் பவுன்டேஷன் ஏற்பாட்டில் , ஊடகவியலாளர்களுக்கும் – ஹாசிம் உமரின் நண்பர்களுக்குமென இடம்பெற்ற இப்தார் நிகழ்வு கொழும்பு – கொள்ளுப்பிட்டி குயீன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

அரசியல்வாதிகள் எவரும் அழைக்கப்படாமலும் அவர்களின் பங்குபற்றலின்றியும் சிறப்பாக இடம்பெற்ற இந் நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் Siddi Farook அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

நீண்ட பல வருட காலமாக இவ்வாறான இப்தார் நிகழ்வுகளை நடத்திக் கொண்டுவரும் ஹாசிம் உமர் அவர்கள் ஒருபோதுமே அரசியல்வாதிகளுக்கு அழைப்பே விடுக்கமாட்டார்.

ஊடகவியலாளர்கள் இங்கேயாவது நிம்மதியாக இருந்து , கலகலப்பாக உரையாடி, உணவருந்தி செல்லட்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டுதான் அவர் , அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுப்பதில்லை என்பது எனதும் என்னைப்போன்ற பலரினதும் அபிப்பிரயாம். ( எனது இந்த எண்ணம் சரியோ, பிழையோ தெரியாது).

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவரின் பங்குபற்றுதல் வரவேற்புக்குரிய விடயம். கூட்டுத்தாபனத்தில் கடமைபுரியும் மற்றும் செய்தித் துறையோடு தொடர்புடைய ஊடகவியலாளர்கள் தங்கள் தேவைப்பாடுகளையும் தாம் அவ்வப்போது எதிர்நோக்கும் அசௌகரியங்கள் குறித்தும் தலைவருடன் மனம்விட்டு, சுதந்திரமாக உரையாட நல்லதொரு சந்தர்ப்பமாக இந்த இப்தார் களமமைத்துக் கொடுத்திருந்தது.

களமமைத்துக் கொடுத்த புரவலருக்கு கோடி நண்மைகள் உண்டாகட்டும் என்பது அவர்களின் பிரார்த்தனையாகும்.

இப்தார் நிகழ்வின்போது முக்கியமான தகவலொன்றும் காதுகளுக்கு எட்டியது. அந்த விடயத்தில் அதிக கரிசனை கொண்டு செயற்பட்டு தனித்து நின்று சாத்தியமாக்கி இருக்கின்றார் ஹாசிம் உமர் அவர்கள் .

அடிப்படையில் எதுவித குற்றமும் இழைக்காது – பணி இடைநிறுத்தத்திற்கு உள்ளான முழு நேர ஊடகவியலாளர் ஒருவருக்கு மீண்டும் பணியாற்ற அநுமதி கிடைத்திருப்பதுதான் அந்த தகவல். இன்று திங்கள் முதல் அந்த ஊடகவியலாளர் பணியில் மீண்டும் இணைந்து கொள்ளவுள்ளார்.

IMG_4697

IMG_4698

IMG_4699

Web Design by The Design Lanka