பொல்கஹவெல முஹியத்தீன் மஸ்ஜித் மக்தப் 3வது வருட பூர்த்தி விழா » Sri Lanka Muslim

பொல்கஹவெல முஹியத்தீன் மஸ்ஜித் மக்தப் 3வது வருட பூர்த்தி விழா

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

றிம்சி ஜலீல்-


பொல்கஹவெல முஹியத்தீன் மஸ்ஜித் மக்தப் 3வது வருட பூர்த்தி விழா அன்மையில் பொல்கஹவெல முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

இந்த நிகழ்வின் போது மக்தப் மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக குருநாகல் மாவட்ட மக்தப் தலைமை முஆவின் இல்யாஸ் (அஸ்ஹரி) கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்வில் முன்னால் பிரதேசசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட செயலாளருமான அன்பாஸ் அமால்தீன், மக்தப் நிருவாகிகள், மக்தப் முஆவின்கள், பள்ளி நிருவாககுழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

Web Design by The Design Lanka