பாணந்துறை ஹேனமுல்லை ஜீலான் மத்திய கல்லுாாியின் இல்ல விளையாட்டுப்போட்டி » Sri Lanka Muslim

பாணந்துறை ஹேனமுல்லை ஜீலான் மத்திய கல்லுாாியின் இல்ல விளையாட்டுப்போட்டி

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

பாணந்துறை ஹேனமுல்லை ஜீலான் மத்திய கல்லுாாியில் இம்முறை வைத்தியத்துறைக்கு ஒருவரும், பொறியியல்துறைக்கு ஒருவரும் சட்டத்துறைக்கும் தெரிவாகியுள்ளதையிட்டு நான் இம் மாணவா்களையும் அதிபா் ஆசிரியா்களையும் பாராட்டுவதாகத் தெரிவித்தாா். அத்துடன் ஏனைய பட்டப்படிப்பினை மேற்கொள்ள தெரிவாகியுள்ளதையிட்டு இப்பாடசாலையின் கல்வித் தரம் முன்னேறியுள்ளது. இதனையிட்டு தான் களுத்துறை மாவட்டத்தின் தமிழ் மொழி பாடசாலைகளில் முன்னேற்றம் பற்றி மகிழ்ச்சியடைவதாகவும் அவா் தெரிவித்தாா். அத்துடன் இக் கல்லுாாியில் 1000 பேர் இருக்கை கொண்ட கூட்ட மண்டபத்தினை வா்த்தகா் நிர்மாணித்துக் கொடுத்துள்ளாா்.

அத்துடன ஜனாதிபதி நிதியில் விஞ்ஞான கூடம் உள்ளது. அதே போன்று எதிா்காலத்தில் இங்கு நிலவும் ஆசிரிய பற்றாக்குறையை தான் நிவா்த்தி செய்வேண் என மேல் மாகாணக் கல்விப் பணிப்பாளா் சிறிலால் நோனிஸ் தெரிவித்தாா்

பாணந்துறை ஹேனமுல்லை ஜீலான் மத்திய நவதோய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி ஹேனமுல்லை நகர சபை மைதாணத்தில் கல்லுாாி அதிபா் ஹலீம் மஜீத் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளா் சிறிலால் நோனிஸ் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அவா் அங்கு தெரிவித்தாா்.

இவ் வைபவத்தில் பாணந்துறை வலயக் கல்விப் பணிப்பாளா், மற்றும் வா்த்தகா் புவாத் ஹாஜியாா், முன்னாள் அதிபா் ஏ.ஆர்.எம் ஜிப்றி, இஸ்மாயில், பழைய மாணவா்கள் பெற்றோா்களும் கலந்து சிறப்பித்தனா்.

இந் நிகழ்வின் போது இஸ்ஸத் இல்லம், ரகுமத் இல்லம், சீனத் இல்லம் ஆகிய இல்லங்களுக்கிடையில் பல்வேறு போட்டிகளில் 401 புள்ளிகளைப் பெற்று ரஹ்மத் இல்லம் முதலிடத்தினைப் பெற்றது. வெற்றிக் கிண்னத்தினை பிரதம அதிதியிடம் இருந்து இல்லத் தலைவா் பெற்றுக் கொண்டாா்.

இந் நிகழ்வின்போது வா்த்தகா் புவாத் ஹாஜியாா் இக் கல்லுாாிக்குரிய சகல பேண்வாா்த்திக் கருவிகளை வாங்கி அன்பளிப்பு செய்வதாக தெரிவித்திருந்தாா்.

gee4 gee5

gee2 gee6 gee10

Web Design by The Design Lanka