அமைச்சர் ஹக்கீமுடன் சந்திப்பு » Sri Lanka Muslim

அமைச்சர் ஹக்கீமுடன் சந்திப்பு

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில யூத் லீக் தலைவர் பள்ளப்பட்டி எம்.கே.முஹம்மது யூனூஸ், கரூர் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன், திருச்சி மணிச்சடர் செய்தியாளர் எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பிப்ரவரி 16 ஆம்தேதி நடைபெறும் மாநில மாநாடு விளக்க நோட்டீஸ் அளித்தார்கள்.

பின்னர் இந்த மாநாடு திருப்புமுனையாக அமைய இறைவனிடம் து ஆ செய்வதாகவும் மேலும் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka