இரு புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்……. » Sri Lanka Muslim

இரு புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்…….

maithiri_sir_001

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராக லக்கி ஜயவர்தனவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக ஜே.சி.அலவத்துவலவும் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.

இதற்கு முன்னர் லக்கி ஜயவர்தன மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் ஜே.சி.அலவத்துவல உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சராகவும் பணியாற்றினர்.

இன்று இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.07.10

Web Design by The Design Lanka