மகாவலி விவசாயிகளுக்கு சூரிய சக்தியினால் நீர் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த புதிய செயற்திட்டம்………. » Sri Lanka Muslim

மகாவலி விவசாயிகளுக்கு சூரிய சக்தியினால் நீர் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த புதிய செயற்திட்டம்……….

maith

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

மகாவலி விவசாயிகளுக்கு சூரிய சக்தியினால் நீர் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த புதிய செயற்திட்டம்……….கிராம சக்தி செயற்திட்டத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படும் உழவிற்கான சக்தி வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில்  (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் மிக முக்கிய பல்நோக்கு செயற்திட்டமான மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மூவாயிரம் விவசாய குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மூவாயிரம் ஏக்கருக்கு சூரிய சக்தியினால் நீர் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதே இந்த உழவிற்கான சக்தி வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணியாகும்.

பெரிய வெங்காயம் மற்றும் மிளகாய் செய்கைக்கு தேவையான தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொடுத்து விவசாயிகளினதும் நாட்டினதும் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்க அந்த செயற்திட்டத்தினூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் மாறிவரும் காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் வரட்சியை எதிர்கொள்ளல், மின்சக்தி மற்றும் எரிபொருள் பாவனையை குறைத்தல் என்பன இச்செயற்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.

கிராம சக்தி தொழில்முயற்சி அபிவிருத்தி செயற்திட்டம், மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சு மற்றும் மக்கள் வங்கி ஆகியன இணைந்து இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயந்த விஜேரத்ன, மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சரத் சந்ரசிறி வித்தான, தேசிய பொருளாதார சபையின் பொது செயலாளர் லலித் சமரகோன் உள்ளிட்டோரும் இச்செயற்திட்டத்திற்கு அனுசரணை வழங்கும் தனியார் நிறுவனங்களின் பிரதானிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Web Design by The Design Lanka