றஊப் ஹக்கீம் தலைமையில் - 93 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஹபுகஸ்தலாவ குளம் அபிவிருத்தி ! » Sri Lanka Muslim

றஊப் ஹக்கீம் தலைமையில் – 93 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஹபுகஸ்தலாவ குளம் அபிவிருத்தி !

IMG_5914

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

நயீமுல்லாஹ் மஸீஹுத்தீன்


வேளாண்மைக்கு நீர் பாய்ச்சி, சென்பகச் சோலைக்கு மெருகூட்டிய எமதூர் குளத்திற்கு புத்துயிர் வழங்கி புதுப் பொலிவு சேர்க்கும் பெரு விழா!

‘அல்ஹம்துலில்லாஹ்’ பல்லாண்டு கால கனவு இன்று நனவாகிறது!

நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சின் 93 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிலான அபிவிருத்திப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு ‘இன்ஷா அல்லாஹ்’ எதிர்வரும் 13.07.2018 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு ஹபுகஸ்தலாவ நகரில் நடைபெறவுள்ளது.

‘ஹபுகஸ்தலாவ குளம்’ எம் அனைவருக்கும் உரித்தான பரம்பரைச் சொத்து; முக்கால்வாசி தூர்ந்து போயிருந்தாலும் மூதாதையர் எமக்கு விட்டுச்சென்ற முதுசம். அனுபவிப்பது போலவே அதனை அழியவிடாது புனரமைப்பதிலும் எம் அனைவருக்கும் உரிய பங்குள்ளது.

எனவே, இம் மாபெரும் நிகழ்வுக்கு நேரம் ஒதுக்கி தவறாது பங்குபற்றி சிறப்பிக்குமாறு ஊர் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

Web Design by The Design Lanka