மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி – 2019 - Sri Lanka Muslim

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி – 2019

Contributors
author image

அகமட் எஸ். முகைடீன்

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி – 2019 இறுதிநாள் நிகழ்வு அதிபர் எம்.ஏ.எம் இனாமுள்ளா தலைமையில் நேற்று (3) ஞாயிற்றுக்கிழமை மாலை மருதமுனை மசூர் மௌலானா மைதானத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜ|Pம், கல்முனை வலய கல்வி அலுவலக பிரதி கல்விப் பணிப்பாளர்களான பீ, ஜிஹானா அலீப், பி.எம்.வை. அறபாத், உதவி கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம். சாஜித், சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ஏ.டப்ல்யு.எம். சமீம், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். பதுறுதீன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ். உமர் அலி, ஏ.ஆர். அமீர், எம்.எஸ். ஹாரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.எம். முஸ்தபா, ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் ஏ.எல். சக்காப், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, மற்றும் மருதமுனை பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், அல்-ஹம்றா வித்தியாலய பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நீல நிற வீனஸ், பச்சை நிற மார்ஸ், சிவப்பு நிற ஜூபிடர் ஆகிய இல்லங்களுக்கிடையே நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் அணிவித்து வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியின்போது இல்ல அலங்கரிப்பிற்கான முதலாமிடத்தை வீனஸ் இல்லமும், மார்ஸ் மற்றும் ஜூபிடர் ஆகிய இல்லங்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

ஆரம்ப பிரிவு விளையாட்டுப்போட்டிகளில் 174 புள்ளிகளைப் பெற்று மார்ஸ் இல்லம் முதலாமிடத்தையும், 170 புள்ளிகளைப் பெற்று வீனஸ் இல்லம் இரண்டாமிடத்தையும், 160 புள்ளிகளைப் பெற்று ஜூபிடர் இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

பெரு விளையாட்டுக்களில் 107 புள்ளிகளைப் பெற்று ஜூபிடர் இல்லம் முதலாமிடத்தையும், 72 புள்ளிகளைப் பெற்று மார்ஸ் இல்லம் இரண்டாமிடத்தையும், 60 புள்ளிகளைப் பெற்று வீனஸ் இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் 185 புள்ளிகளைப் பெற்று மார்ஸ் இல்லம் முதலாமிடத்தையும், 176 புள்ளிகளைப் பெற்று ஜூபிடர் இல்லம் இரண்டாமிடத்தையும், 131 புள்ளிகளைப் பெற்று வீனஸ் இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

அல்-ஹம்றா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி – 2019 இன் சம்பியனாக 287 புள்ளிகளைப் பெற்ற ஜூபிடர் இல்லம் வெற்றிபெற்றது.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியின்போது நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான அஞ்சலோட்டப் போட்டியில் முதலாமிடத்தை மருதமுனை கோல்ட்மைன் விளையாட்டுக் கழகமும், மரதன் ஓட்டப் போட்டியில் முதலாமிடத்தை மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழக வீரர் யு.எஸ்.எம். அனோஜ்ஜூம், இரண்டாமிடத்தை ஒலிம்பிக் விளையாட்டுக் கழக வீரர் ஹிமாம் டில்டாரும், மூன்றாமிடத்தை மருதம் விளையாட்டு கழக வீரர் எம்.எம். றினாசும் பெற்றுக்கொண்டனர்.

IMG_1173 IMG_1227 IMG_1230

IMG_1245 IMG_1249

Web Design by Srilanka Muslims Web Team