முதல்முறையாக அமீரகத்தில் போப் பிரான்சிஸ்: ஏமன் பிரச்சனை குறித்து பேசுவாரா? » Sri Lanka Muslim

முதல்முறையாக அமீரகத்தில் போப் பிரான்சிஸ்: ஏமன் பிரச்சனை குறித்து பேசுவாரா?

_105466475_492d30ce-555d-4c08-a2ce-d9870a3bcceb

Contributors
author image

BBC

போப் பிரான்சில் ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார். அரேபிய தீபகற்பத்திற்கு செல்லும் முதல் போப் இவர்தான். அபுதாபி வந்த அவரை முடியரசர் ஷேக் முகம்மது பின் ஜையத் அல் நஹ்யான் வரவேற்றார்.

செவ்வாய்க்கிழமை நடைபெறும் மதநல்லிணக்க கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இதில் ஏறத்தாழ 120,000 பேர் பங்கேற்கிறார்கள்.

அரேபியா செல்லும் முன் அவர் ஏமன் போர் குறித்து கவலை தெரிவித்திருந்தார். ஏமன் போரில் அரேபியா பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏமனில் பல குழந்தைகள் பசியால் வாடுவதாக போப் கூறி இருந்தார்.

செளதி மேற்கொண்டுள்ள ஏமன் போரில் செளதியின் பக்கம் அமீரகம் நிற்கிறது.

போப் ஏமன் பிரச்னை குறித்து அமீரகத்திடம் பேசுவாரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

Web Design by The Design Lanka