கல்முனை; டாக்டர் நௌஷாட்கான் லண்டனில் பேராசிரியராக ஆக பதவியுயர்வு » Sri Lanka Muslim

கல்முனை; டாக்டர் நௌஷாட்கான் லண்டனில் பேராசிரியராக ஆக பதவியுயர்வு

4

Contributors
author image

S.Ashraff Khan

இலங்கை கிழக்கு மாகாணம் கல்முனையைப் பிறப்பிடமாக கொண்ட டாக்டர் நௌஷாட்கான் லண்டனில் Professor (பேராசிரியர்) ஆக பதவியுயர்வு பெற்றுள்ளதுடன் துறைசார்ந்த இலங்கையின் முதல் Professor ஆக இவர் வரலாறு படைத்துள்ளார்.

Consultant Emergency Physician ஆக லண்டன் Doncaster Bassetlaw Teaching Hospital (NHS) இல் கடமை புரியும்போது Professor (பேராசிரியர்) ஆக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

கல்முனை ஸாஹிறா கல்லூரியின் பழைய மாணவரான இவர் மர்ஹும் அல்ஹாஜ் அலியார் முஹம்மது கான் (ஓய்வு பெற்ற ஆசிரியர், பகுதித்தலைவர்) மற்றும் ஹாஜியானி றுக்கியா உம்மா முஹம்மது கான் (ஓய்வு பெற்ற அதிபர்) ஆகியோரின் சிரேஷ்ட புதல்வரும், எம்.கே. இர்ஷாட் கான் (ஆசிரியர், 2nd Lieutenant, திறந்த பல்கலைக்கழக சட்டபீட 3ம் வருட மாணவன்) இன் சகோதரரும் ஜனாபா ஜஹானாவின் அன்புக்கணவரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார்.

இவர் தனது வைத்திய பட்டதாரிப்படிப்பை இலங்கையில் 1998 இல் முடித்தபின் லண்டனுக்கு மேற்படிப்புக்காகச்சென்று 2005 இல் தனது MSc ஐ ‘Diabetes’துறையிலும் டிப்ளோமா பட்டத்தை ‘பொதுச்சுகாதாரம்’ த்திலும் பெற்றுக்கொண்டார். இவர் தனது Emergency Medicine Speciality பயிற்சியை நிறைவுசெய்த பின் MRCEM(UK) MECEM (UK) என்ற பட்டங்களையும் பெற்றார். பின் இவர் Passionate about Teaching and Transforming Emergency Medicine training system ஐ லண்டனிலும் உலகளாவிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தினார். மேலும் ‘Hybrid’ International Emergency Medicine program இன் மூன்று Concept Developers களில் இவரும் ஒருவராவார். இது தொடர்பான பல வெளியீடுகளையும் இவர் செய்துள்ளார்.

டாக்டர் நெளஸாட்கான் சர்வதேச அவசரசிகிச்சைப்பிரிவின் (ICEM) இன் CO- Founder உம் லண்டன் QiMED இன்பிரதிப் பணிப்பாளரும் நேபாள் நாட்டின் Chitwan Medical College இன் Emergency Medicine Associate Professor ஆவார்.

இவர் தனது 46 வது இளம் வயதிலேயே Professor தரத்திற்கு உயர்வு பெற்றது ஒரு வரலாற்றுச்சாதனையாகும்.இத்துறையில் இலங்கையின் முதல் Professor உம் இவரேயாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4

Web Design by The Design Lanka