மாவனல்லை ஸாஹிரா; (2007 O/L & 2010 A/L Batch) இப்த்தார் » Sri Lanka Muslim

மாவனல்லை ஸாஹிரா; (2007 O/L & 2010 A/L Batch) இப்த்தார்

001

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Shamran Nawaz


மாவனல்லை ஸாஹிரா 2007 சா/த மற்றும் 2010 உ/த மாணவர்களின் ஏற்பாட்டில் முதல் முறையாக மாவனல்லை பாடசாலைகள் மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் முயற்ச்சியில் ஐக்கிய இப்தர் நிகழ்வொன்று நேற்று (10) மாவனல்லையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாவனல்லை ஸாஹிரா, பதுரியா, ஹெம்மாதகமை அல்-அஸ்ஹர், நூரானியா மற்றும் மயூரப்பாத மத்திய கல்லூரி, பாடசாலைகளின் நூற்றுக்கும் அதிகமான குறித்த வகுப்பு மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வானது குறித்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது போன்ற முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவர்வர்கள் அடிக்கடி ஒருங்கிணைவு செய்து எமது சமூகத்துக்கு முன்னுதாரணாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்த்தார் நிகழ்ச்சியை தொடர்ந்து குறிப்பிட்ட பாடசாலைகளில் இருந்து ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டதுடன் எதிர்கால சமூகநல அபிவிருத்தி மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி சார் வளர்ச்சி பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் எமது அடுத்த செல்திட்டம் சம்பந்தமான முடிவுகளும் எடுக்கப்பட்டது.

இந்த எமது செயல்பாட்டுக்கு பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

001

003

Web Design by The Design Lanka