இலங்கையில் 50,134 முஸ்லிம்கள் அரச பணியாளர்களாக ; மொத்த அரச பணியாளர்களில் இது 4.2 சதவீதமாகும் » Sri Lanka Muslim

இலங்கையில் 50,134 முஸ்லிம்கள் அரச பணியாளர்களாக ; மொத்த அரச பணியாளர்களில் இது 4.2 சதவீதமாகும்

large_a1zgre7Rq3huEpuUmaKfed_c87m-ooml4_Nr_FSUdM0

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஏ.எல்.ஜுனைதீன்


இலங்கையில் 2016 நவம்பர் 17ஆம் திகதிய நிலவரப்படி 50,134 முஸ்லிம்கள் அரச பணியாளர்களாகப் பணியாற்றுகின்றனர். இவர்களில் 29,004பேர் ஆண்கள் 21,130 பேர் பெண்கள் என தொகை மதிப்பு புள்ளி விபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது இலங்கையிலுள்ள மொத்த அரச பணியாளர்களில் 4.2 சதவீதமாகும்.

இது போன்று 123,727 தமிழர்கள் அரச பணியாளர்களாகப் பணியாற்றுகின்றனர். இது இலங்கையிலுள்ள மொத்த அரச பணியாளர்களில் 12.4 சதவீதமாகும்.

இதேவேளை, 929,272 சிங்களவர்கள் அரச பணியாளர்களாகப் பணியாற்றுகின்றனர். இது இலங்கையிலுள்ள மொத்த அரச பணியாளர்களில் 82.9 சதவீதமாகும்.

இது தொடர்பான இறுதி அறிக்கை தற்போது தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

Web Design by The Design Lanka