14 கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் கைது » Sri Lanka Muslim

14 கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் கைது

22

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(ஹாசிப் யாஸீன்)


சட்ட விரோதமாக கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருதானது,

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறி பல ஊர் இளைஞர்களிடமிருந்து பணத்தினையும் கடவுச்சீட்டுக்களையும் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய வந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞரை ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவல்களை அடுத்த சம்மாந்துறை பொலிஸார் நேற்று முந்தினம் வியாழக்கிழமை (07) சுற்றிவளைத்து குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படட இளைஞரிடமிருந்து சட்ட விரோதமாக வைத்திருந்த 14 கடவுச்சீட்டுக்கள் மற்றும் கணனி உபகரணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இளைஞரை சம்மாந்துறை பொலிஸார் வெள்ளிக்கிழமை (08) நீதிமன்றில் ஆஜர் செய்ததை அடுத்து மேலதிக விசாரணைக்கான 14 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka