அம்பாறை கரையோர பிரதேசங்களில் மக்கீன் முஹம்மத் அலிக்கு மகத்தான வரவேற்பு » Sri Lanka Muslim

அம்பாறை கரையோர பிரதேசங்களில் மக்கீன் முஹம்மத் அலிக்கு மகத்தான வரவேற்பு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எம்.என்.எம்.அப்ராஸ், எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.ரம்சான், நூறுல்ஹுதா)


71வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் நாட்டில் உள்ள சகல இன மக்களின் நல்லிணக்கம் வேண்டியும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுவொன்றை மேற்க்கொள்ள வவுனியாவை சேர்ந்த மாற்று திறனாளி எம்.முஹம்மத் அலி தனது முச்சக்கர நாற்காலி மூலம் நாடு பூராக 1400 கிலோ மீட்டர் சாதனைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பெப்ரவரி 1ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த இவர் நாடுபூராகவுள்ள பிராதன நகரங்களான வவுனியா, ,அனுராதபுரம், புத்தளம், நீர்கொழும்பு ஊடாக கொழும்பு ,ஹம்பாந்த்தோட்டை மொனராகலை ,பொத்துவில் ஊடாக தனது பயணத்தின் 9வது நாளன்று நேற்று (9)அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ,ஒலுவில்,நிந்தவூர் ,மாளிகைக்காடு,சாய்ந்தமருது, கல்முனை, பிரதேசங்களில் இவருக்கு சமூக மட்ட அமைப்புகள்,அரசியல் பிரமுகர்கள், கழகங்கள் ,பொது மக்களால் பெரும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாளைய தினம் கல்முனையிலிருந்து புறப்படும் இவர் மீண்டும் மட்டக்களப்பு ,ஊடாக யாழ் நகரை சென்றடையவுள்ளார் .

20190209_165114 20190209_173528 20190209_173808

Web Design by The Design Lanka